கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பள்ளி மாணவ மாணவிகள் இன்று ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். அவர்களை பெற்றோர்கள் இன்று பள்ளிக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றனர். பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. சில பள்ளிகளில் இனிப்பு பூ கொடுத்து மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்றனர்.