ஆசாரிப்பள்ளத்தில் பாட்டிலால் மாணவன் மார்பில் கிழிப்பு

1282பார்த்தது
ஆசாரிப்பள்ளத்தில் பாட்டிலால் மாணவன் மார்பில் கிழிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவனை சிவசூர்யா உட்பட 2 பேர் ஆபாசமாக பேசி பிராந்தி பாட்டிலால் மார்பில் கிழித்து தாக்கி உள்ளனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு சிவசூர்யா மீது ஆசாரிப்பள்ளம் போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்தனர். இதற்கு மாணவன் தான் காரணம் என்று நினைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து, சிவசூரியாவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி