நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் யாதவர் தெருவில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதி காலை 4: 30 மணிக்கு ஆதிபராசக்திக்கு 18 வகை சிறப்பு அபிஷேகமும், சக்தி பீடத் தலைவர் சின்னத்தம்பி தலைமையில் கூட்டு தியானமும் நடைபெற்றது. காலை 6. 30 மணிக்கு மகா தீபாராதனையும் ஆடை தானமும் நடந்தது. இதில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காளியப்பன் கலந்து கொண்டு ஆடைகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து அன்னதானத்தை சக்தி பீட பொருளாளர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து மேல்மருவத்தூர் தைப்பூச விழாவை முன்னிட்டு இருமுடி கட்டி சக்திமாலை அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சக்தி பீடத்தலைவர் சின்னத்தம்பி தலைமையில் துணைத்தலைவர் அருணாசலம், -பொருளாளர் அசோக்குமார் மற்றும் செல்வரெத்தினம், நாகராஜன், சுப்பிரமணியன், செந்தில், பால்ராஜ், ராமகிருஷ்ணன், சந்திரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.