புதுக்கடை: பெண்களிடம் ஆபாசமாக நடந்ததாக ஒருவர் மீது வழக்கு

68பார்த்தது
புதுக்கடை: பெண்களிடம் ஆபாசமாக நடந்ததாக ஒருவர் மீது வழக்கு
புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் அனிஷ் மனைவி சிந்து (31). சம்பவ தினம் சிந்துவும், அவரது உறவு பெண் ஒருவரும் வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பத்மநாபன் என்பவர் பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியுள்ளார். சிந்து ஆபாசமாக பேசாதீர்கள் என கூறியதும் அவர் கட்டியிருந்த துணியை பத்மநாபன் உருவி விட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் சத்தம் போட்டதும் சிந்துவின் கணவர் தம்பிகள் வினு மற்றும் அனு ஆகியோர் தட்டிக் கேட்டதில் தகராறு ஏற்பட்டது. இதில் பத்மநாபனுக்கு காயம் ஏற்பட்டது. காயத்தை வைத்து அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பத்மநாபன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டது. புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி