கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஒன்றியம் தர்மபுரம் ஊராட்சியில் 4 கோடிக்கு மேல் ஊழல் முறைகேடு கையாடல் செய்துள்ள ஊராட்சி மன்ற தலைவி ரங்கநாயகியை பதவி நீக்கம் செய்து சொத்துக்களை ஜப்தி செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.