கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில அடுத்துள்ள கோதை கிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்பாள் திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை ஒட்டி சிவபெருமானுக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் களபம் மூலிகைச் சாறு கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பிரதோஷ நாயகர் கோயிலை சுற்றி மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.