கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. கடலோரப் பகுதிகளிலும் காற்று வேகமாக வீசி வரும் நிலையில், ராஜாக்கமங்கலம் அருகே லெமூர் கடற்கரையில் கடலில் இறங்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை இல்லை. மேலும் அங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.