கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடைச் சேர்ந்த ஜெபிலாவுக்கு, மேல்மிடாலத்தைச் சேர்ந்த நிதின் என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. நேற்று காலை ஜெபிலா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், ஜெபிலாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் புகார் அளித்துள்ளார். மேலும், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் பிரேத சோதனைக்கு கொண்டு செல்லப்பட்ட உடலை, உறவினர்கள் வாங்க மறுத்து இன்று போராட்டம் நடத்தினர்.