நாகர்கோவில்: அரசுப் பேருந்தை சிறை பிடித்து மக்கள் போராட்டம்.

85பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புத்தேரி பேச்சங்குளம் சாலையில் அப்பகுதி பொதுமக்கள் இன்று (டிசம்பர் 27) பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கள் பகுதியில் கல்லறை தோட்டம் அமைத்து தராமல் இருப்பதாகவும், பட்டியலின மக்களை மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாகவும் குற்றச்சாட்டி 100-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி