கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் அருகே மேல ஆசாரிப்பள்ளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பங்கு மக்கள் ஊர் மக்களும் இணைந்து உணவு திருவிழாவை இன்று (டிசம்பர் 22) நடத்தினர். பல்வேறு வகையான உணவுகளை வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வந்து கண்காட்சியில் இடம்பெற செய்ததுடன், அதனை பலரும் வாங்கி சென்றனர். சாலையோர உணவுகளை தவிர்த்து அனைவரும் வீட்டில் உணவுகளை சமைக்க வேண்டும் என இதன் மூலம் வலியுறுத்தப்பட்டது.