கன்னியாகுமரி மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள நிலங்கள் கட்டிடங்கள் காலி மனைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாகர்கோவில் பாலமோர் சாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகள் அளவிடும் பணி நேற்று நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து சொத்துகளும் அளவிடும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.