தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று(அக். 9) நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை தமிழ்நாடு தொழிலாளர் துறை உடனடியாக பதிவு செய்து சான்றிதழ் தர வேண்டும், தொழிற் சங்க உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என போராட்டம் நடைப்பெற்றது.