தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான இன்று (ஜூன் 03) நாகர்கோவில் திமுக அலுவலகம் முன்பு உள்ள அவரது முழு உருவ சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் உணவு ஆணையத் தலைவர் சுரேஷ்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.