நாகர்கோவிலில் பெயிண்டரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

79பார்த்தது
நாகர்கோவிலில் பெயிண்டரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழபெருவிளை பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (வயது 28), பெயிண்டர். இவருக்கும் ஆலம்பாறை பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான தங்கதுரை (29) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நாடான்குளம் பகுதியில் அஜித் நின்றுகொண்டிருந்தார். அங்கு வந்த தங்கதுரை அஜித்திடம் தகராறில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த தங்கதுரை கீழே கிடந்த பீர் பாட்டிலால் அஜித்தைத் தாக்கினார். இதில் காயமடைந்த அஜித் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் தங்கதுரையை வடசேரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி