பெண்கள் பாதுகாப்பு உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மகிளா
காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் இருந்து நடைபெற்றது. பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட மகிளா
காங்கிரஸ் தலைவி சோனிவிஜிலா முன்னிலை வகித்தார். விஜய்வசந்த் எம். பி. பேரணியை தொடங்கி வைத்து பேசினார். ஆராட்டு ரோடு , காந்தி பூங்கா வரை அமைதி பேரணி சென்றது. பின்னர் , வடசேரி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பேரணி நிறைவு பெற்றது. இதில் மகிளா
காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.