நாகர்கோவிலில் மது விற்றவர் கைது.

67பார்த்தது
நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று புதுகுடியிருப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப் படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வாத்தியார் விளையில் வசித்து வரும் மணிகண்டன் (வயது 32) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தபோலீசார் விற்பனைக்காக வைத்திருந்த 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி