நாகர்கோவிலில் மது விற்றவர் கைது

72பார்த்தது
நாகர்கோவிலில் மது விற்றவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று நாடாங்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ஜாண்சன் (வயது 29) என்பதும், மது விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி