பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து விமர்சனம் செய்ததற்கு, நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விசிகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (டிசம்பர் 21) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் அம்பேத்கர் குறித்து தவறாக பேசிய மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க என நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினர்.