தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.7,500 க்கு விற்பனையானது. அதேசமயம் கன்னியாகுமரி தோவாளை மலர்சந்தையில் ரூ.4,000-க்கு விற்பனையானது. தொடர்மழை காரணமாக பூ வரத்து குறைந்துள்ளதாலும், நாளை (டிசம்பர் 15) இந்தாண்டின் கடைசி முகூர்த்த நாள் என்பதாலும் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.