குமரி: தொழிலாளியிடம் பணம் பறித்த ரவுடி உள்பட 2 பேர் கைது.

52பார்த்தது
குமரி: தொழிலாளியிடம் பணம் பறித்த ரவுடி உள்பட 2 பேர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் அழகம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் கலைஞர் (வயது 45), தொழிலாளி. இவர் நேற்று ஆசாரிபள்ளம் வெள்ளமண் ஓடை சானல் கரையில் நடந்து சென்றார். அப்போது பீச்ரோடு பெரியவிளை பகுதியை சேர்ந்த சிவசங்கர் (41), நெசவாளர் காலனியை சேர்ந்தவருண் (38) ஆகியோர் அங்கு வந்தனர், பின்னர் கத்தியை காட்டி மிரட்டிரூ. 250-ஐ பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் கலைஞர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசங்கர், வருண் ஆகியோரை கைது செய்தனர். கைதான சிவசங்கர் மீது 3 வழக்குகள் உள்ளன. மேலும் வருண் மீது 5 வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் இவர் பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி