கன்னியாகுமரி முட்டைக்காடு பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகள் மீது கார் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் அங்கிருந்த முதியவர் மீதும் கார் மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டிவந்த இளைஞரின் கட்டுப்பாட்டை கார் இழந்ததால் விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.