கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி மேம்பாலத்தின் கீழ் கொட்டப்படும் குப்பைகளால் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த மேம்பாலத்தின் வழியாக செல்கின்றன. மேலும் இதிலிருந்து வெளிவரும் கரும்புகையானது பல்வேறு உடல் உபாதைகளை உண்டாக்குவதால், இந்த இடத்தில் குப்பைகளை கொட்டாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.