குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை வகித்த மார்ஷல் நேசமணியின் 57வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, நாகர்கோவிலில் அவரது மணிமண்டபத்தில் உள்ள நேசமணி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று (ஜூன் 1) மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் நேசமணியின் உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.