நாகர்கோவிலில் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

60பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன் கோவில் தெருவில் 5 தலை முறையாக குடியிருக்கும் அருந்ததியர் மக்களுக்கு நிரந்தரமாக பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சி சார்பில் நேற்று நாகர்கோவில் விளையாட்டு மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆதித்தமிழர் கட்சி நிறுவன தலைவர் ஜக்கையன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாறன் , மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் சிவ ராஜா பூபதி , மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணவைக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி