மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவில் வடசேரி அம்பேத்கர் சிலை முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று (டிச. , 23) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.