கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம். இன்று உண்டியல் எண்ணும் பணி அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் பழனி குமார் ஆகியோர் தலைமையில் தொடங்கியது. உண்டியல் பணம் தனியாகவும், சில்லறை தனியாகவும், நகைகள் தனியாகவும் பிரித்து எண்ணப்பட்டு வருகின்றன.