கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நியாய விலை கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினைக்குமார் மீனா, உதவி ஆட்சியர் சுஷ்ஸ்ரீ குந்தியா உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவது குறித்து பேசப்பட்டது.