நாகர்கோவில், கோணம் அரசினர் தொழில்நுட்ப பயிற்நி நிலையம் மற்றும் அரசினர் தொழில்நுட்ப கல்லூரி, மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, கலந்துரையாடி தெரிவிக்கையில்-
தமிழக அரசு பள்ளி படிப்பை முடித்த மாணவ மாணவியர்கள் மேற்படிப்பை பயில வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வி உதவி தொகை, நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்புதல்வன் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதனை கருத்தில் கொண்டு மாணவராகிய நீங்கள் நன்றாக படிக்க வேண்டும்.
மேலும் மாணவர்களிடம் பாடத்திட்டம், சுற்றுப்புற சூழ்நிலை, கல்லூரிகளில் தேவைப்படும் வசதிகள் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா தெரிவித்தார்.