கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோயில் அருகே அண்ணாமலை கண்டன் சாஸ்தா கோயில் உபயதாரர் மூலம் முன்மண்டபம் ரூ. 10 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, மராமத்து பொறியாளர் ராஜ்குமார், ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.