நாகர்கோவிலில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி.

26பார்த்தது
குமரி மாவட்டத்தில் விபத்துக்களில் உயிரிழப்பை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கோணம் அரசு கலை கல்லூரி மற்றும் காவல் துறை சார்பில் நடந்த இந்த பேரணியை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய இந்த பேரணியானது மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு, கோர்ட்டு ரோடு வழியாக டதி பள்ளி சந்திப்பு சென்று முடிவடைந்தது. பேரணியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். 'நோ ஹெல்மெட், நோ என்ட்ரி' என்ற விழிப்புணர்வு வாசகம் அச்சிடப் பட்ட பதாகையை கையில் ஏந்தியபடி சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி