கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கன்னிமார் மேட்டு தெருவை சேர்ந்தவர் மினி லோடு ஆட்டோ ஓட்டுனர் மோகன்(54). இவரை நாவல் காட்டு பகுதியை சேர்ந்த இரும்பு கடையில் வேலைசெய்து வரும் ஷாஜ்(30) என்ற வாலிபர் முன்விரோதம் காரணமாக இன்று(டிச. 28) பட்டபகலில் ஒழுகினசேரி நெடுஞ்சாலை ஓரத்தில் வைத்து குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குபதிந்து, கொலை செய்து தலைமறைவான ஷாஜியை தேடி வருகின்றனர்.