நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர் மோகன். ஆட்டோ டிரைவரான இவரை ஷாஜி நேற்று கத்தியால் குத்தி கொலை செய்தார். ஷாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது, மோகனுக்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், தற்போது அந்தப் பெண் ஷாஜியுடன் பழகி வந்துள்ளார். இதனால் மோகன் அந்தப் பெண்ணுக்கு கொடுத்த பணத்தை கேட்டதால், மோகனை ஷாஜி கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.