கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கட்டபொம்மன் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக கோட்டார் போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர்.
பின்னர் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தூக்கில் பிணமாக தொங்கியவர் திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த கோகுல் (வயது 30) என்பது தெரியவந்தது.
இவர் கோட்டார் பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்ததும், இதற்காக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோகுல் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். ஆனால் கோகுல் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற காரணம் இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.