கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் அவ்வை சண்முகம் சாலையில் 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் வாகனங்கள் நிறுத்தும் நிலையம் அமைக்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சிமண்டல தலைவர் அகஸ்டினா கோகுல வாணி மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷயா கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.