கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி ஒழுகினசேரி பழையாற்றின் கரையில் மாசான சுடலைமாடசாமி கோவிலுக்கு செல்லும் வழியில் பொதுமக்களுக்கு சுகாதார கேடு விளைவிக்கும் குப்பை கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. இதனை அறிந்த மாமன்ற உறுப்பினர் சுனில்குமார் நேற்று உடனடியாக ஜே. சி. பி. இயந்திரம் வரவழைத்து குப்பைகளை அகற்றினார்.