கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் தலைமையில் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 28) நடந்தது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே (30.12.2024) நாளை நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.