தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதால் வெப்பத்தை தணிக்க இளநீர், கரும்பு சாறு, தர்பூசணி உள்ளிட்ட ஜூஸ் வகைகளை பொதுமக்கள் பருகி வருகின்றனர். இதில் தர்பூசணியில் செயற்கையாக நிறம் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் நாகர்கோவிலில் கடைகளில் ஆய்வு செய்த போது அதில் 400 கிலோ தர்பூசணியை பறிமுதல் செய்தனர்.