கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தடுக்க மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கடந்த ஆண்டு கஞ்சா வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்ததாக 124 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 218 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும், 566 புகையிலை மற்றும் குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 578 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.