குமரி வந்த 1350 டன் ரேஷன் அரிசி.

84பார்த்தது
குமரி மாவட்ட ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மத்திய, மாநில அரசுகளின் தொகுப்புகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருவாரூரில் இருந்து சரக்கு ரெயில் மூலமாக 22 வேகன்களில் 1350 டன் ரேஷன் அரிசி நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு நேற்று வந்து சேர்ந்தது. பின்னர் ரேஷன் அரி சியை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி லாரியில் ஏற்றி தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிபக்கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். குடோன்களில் இருந்து அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி