கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அடுத்த புளியடியில் குடிநீர் இணைப்பு இல்லாமல் 120 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தவித்து வருவதாக பொதுமக்கள் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சியில் நேற்று புகார் செய்யப்பட்டது. எனவே, தங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளனர்.