இரணியல் ரயில் நிலைய சாலையில் வாலிபர் மர்ம சாவு

68பார்த்தது
இரணியல் ரயில் நிலைய சாலையில் வாலிபர் மர்ம சாவு
இரணியல் அருகே அழகிய மண்டபம் -  திங்கள்நகர் செல்லும்  சாலையிலிருந்து இரணியல் ரயில் நிலையம் செல்லும் சாலையில் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் உள்ள ஆலமரத்தடியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளார். அவர் வெள்ளை நிற சட்டையும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார்.

      இதை பார்த்த பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசுத்த டாக்டர்கள் ஏற்கனவே அந்த நபர் இறந்துவிட்டதாக  தெரிவித்தனர்.  

    இதை அடுத்து அவர் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆத்தி விளை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்பாபு இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.   புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த  போலீசார் இறந்தவர் யார்? எப்படி இறந்தார்?   என்பது குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி