வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையில் பட்டா நிலங்கள் மற்றும் அதனை சார்ந்த சாலையோரம் தள்ளுவண்டிகளில் நொங்கு, பழம், சர்பத், இளநீர் விற்று வரும் தற்காலிக கடை மற்றும் நடைபாதை வியாபாரிகளின் கடைகள் உள்ளன. இந்த கடைகளின் விளம்பர பலகைகளை அடித்து உடைத்து சேதப்படுத்திய வில்லுக்குறி பேருராட்சி ஊழியர்களை கண்டித்து தமிழ்நாடு பாரதிய வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் சங்க மாநில தலைவர் அருள் தலைமையில் பேருராட்சி அலுவலகத்தை தள்ளுவண்டி சிறு - குறு வியாபாரிகள் இன்று முற்றுகையிட்டனர். இரணியல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.