குளச்சல் மீனவர் ஆன்றோ உடலுக்கு மத்தியமைச்சர் அஞ்சலி

7269பார்த்தது
குளச்சல் மீனவர் ஆன்றோ உடலுக்கு மத்தியமைச்சர் அஞ்சலி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் விசைப்படகு மீனவர்கள் 16 பேர் கடந்த மாதம் 25 ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். 28 ம் தேதி இவர்களது படகு மூழ்கியதில் 13 பேர் மீட்கப்பட்டனர். மீனவர்கள் பயஸ், ஆன்றோ, கே. ஆரோக்கியம் ஆகிய 3 பேர் மாயமாயினர். மாயமான மீனவர்களில் மீனவர் பயஸ் உடல் கடந்த 30 ம் தேதி மீட்கப்பட்டது. மீதி 2 பேரை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் ஆன்றோ உடலை இந்திய கப்பற்படை வீரர்கள் மீட்டனர். மீட்கப்பட்ட குளச்சல் மீனவர் ஆன்றோ உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்பு  நேற்று பிற்பகல் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. வீட்டு முன் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஒன்றிய மீன்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஆகியோர் ஆன்றோ உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். உடன் மாவட்ட பா. ஜ. தலைவர் தர்மாராஜ், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பஞ். துணைத்தலைவர் சிவகுமார், கல்குளம் தாசில்தார் கண்ணன், குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்துபாண்டி, கிராம அலுவலர் ராஜேஷ், நகர பா. ஜ. தலைவர் சி. கண்ணன், நகர்மன்ற துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ் மற்றும் கவுன்சிலர்கள், பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் புனித காணிக்கை அன்னை திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருத்தல மயான வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி