திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் ஆல்பிரட் (30). இவர் பத்மனாபபுரம் நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். இவர் தனது உறவினர் ஸ்டாலின் என்பவர் பைக்கை ஓட்டி வந்தார். சம்பவ தினம் அந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இது சம்பந்தமாக திருவட்டார் போலீசில் ஆல்பிரட் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று புத்தன்கடை பகுதியில் வாகன சோதனை நடத்திய போது, பைக்கில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். மேலும் சந்தேகம் அடைந்த அவரை போலீசார் போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் பெயர் மூவிஸ் (23) என்பதும் அவர் பைக் திருட்டில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.
மேலும் அவருடன் குலசேகரம் மற்றும் நாகர்கோவில் பகுதி சேர்ந்த நான்கு பேர் கும்பலாக சேர்ந்து திருட்டு வழக்குகளில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. அவர் ஓட்டி வந்த பைக் வக்கீல் ஆல்பிரட் வீட்டில் திருடியது எனவும் கூறினார். இதை அடுத்து அவர் மறைத்து வைத்திருந்த நான்கு பைக்குகளை போலீசார் மீட்டனர். மேலும் தப்பியோடிய நான்கு பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.