தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப் பயிர்கள் துறை திருவட்டார் வட்டாரம் சார்பில் கிள்ளிக்கோணம், புறாவிளை பகுதிகளில் பழங்குடி விவசாயிகளுக்கான திட்ட விழிப்புணர்வு முகாம் இன்று (ஏப்ரல் 15) நடந்தது.
முகாமில் நாகர்கோவில் தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜான் பங்கேற்று முகாம் நோக்கங்கள் குறித்து பேசினார். திருவட்டார் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆஸ்லின் ஜோஷி தென்னை சாகுபடியில் பூச்சி மேலாண்மை குறித்து பேசினார்.
துணை தோட்டக்கலை அலுவலர் ஞானதயாசிங் மற்றும் தாட்கோ மேலாளர் பேசினர். முகாம் ஏற்பாடுகளை திருவட்டார் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர் லிபின் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.