கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் தக்கலை தெற்கு ஒன்றிய தி. மு. க. செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் பாபு மகன் ஆர். எஸ். லெவிஸ் ரேமிரோவின் முதல் திருவிருந்து நிகழ்ச்சியில் தி. மு. க. வர்த்தகர் அணி இணைச்செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் தாமரைபாரதி கலந்து கொண்டு வாழ்த்தினார். உடன் மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துசாமி, பேரூர் செயலாளர் பூவியூர் காமராஜ், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஆர். டி. ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் சுதன்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.