இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலம் மீட்பு

77பார்த்தது
இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலம் மீட்பு
கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சோழபுரம் நிலமுடைய கண்டன் சாஸ்தா கோயிலுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம்   மாதவாலயம் வருவாய் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக புகார் எழுந்தது.  

    இதை அடுத்து சம்பவ இடத்திற்கு இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு,   இந்து சமய அறநிலையத்துறை நிலவர்களால் நில அளவை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த திருக்கோயில் சொந்தமான நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

        இதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தங்கம், ஆலய நிலங்கள் மீட்பு தனி வட்டாட்சியர் சூரிய பிரபா, துறை சரக ஆய்வாளர் விஜயா ஆகியோர்  நிலத்தை மீட்டு, இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமானது என பெயர் பலகை வைத்தனர். போலீசார்  பாதுகாப்பானில் ஈடுபட்டிருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி