குளச்சல் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

1563பார்த்தது
குளச்சல் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரை சுற்றுவட்டார பொதுமக்களுக்கு சிறந்த பொழுது போக்கும் தலமாக உள்ளது. தினமும் மாலை வேளை மற்றும் விடுமுறை நாட்களில்  பொதுமக்கள் இங்கு வந்து பொழுதை போக்கி செல்வர். கடந்த வாரம்  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குளச்சல் கடற்கரையில் குவிந்து குதூகலித்து சென்றனர். இதனால் குளச்சல் கடற்கரை மிகுந்த களைக்கட்டியது. இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அரசு விடுமுறை மற்றும் பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால் மாலை  சிறுவர்கள் உள்பட ஆயிரக்கணக்கான  பொதுமக்கள் மீண்டும் குளச்சல் கடற்கரையில் குவிந்தனர். அவர்கள் குடும்பத்தினர், நண்பர்கள் என கூட்டம்கூட்டமாக கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து பொழுது போக்கி சென்றனர். குளச்சல் கடற்கரையில் ஒரு வாரத்திற்கு பின்பு மீண்டும் பொதுமக்கள் குவிந்ததால் தள்ளுவண்டி ஐஸ், கடலை வியாபாரிகள் மிகந்த மகிழ்ச்சியடைந்தனர்.

டேக்ஸ் :