குளச்சல் அருகே குழந்தையுடன் நர்ஸ் மாயம்

58பார்த்தது
குளச்சல் அருகே குழந்தையுடன் நர்ஸ் மாயம்
குளச்சல் அருகே கோணங்காட்டை சேர்ந்தவர் ஜெகன் பெலிக்ஸ்(40). கொத்தனார். இவரது மனைவி பெனிஷா மலர்(29). இவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். ஜெகன் பெலிக்ஸிற்கும் பெனிஷா மலருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதியினருக்கு பெர்சிலின் ஜெபி மிர்சா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் காலை ஜெகன் பெலிக்ஸ் கண் விழித்து பார்த்த போது, மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை. இதுபற்றி உறவினர்களிடம் விசாரித்தும் எந்த தவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஜெகன் பெலிக்ஸ் புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி