நித்திரவிளை அருகே பாப்பான்பழஞ்சி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் மனைவி அனிதா. இவர்கள் மகன் சதீஷ் (29) இவருக்குத் திருமணமாகி அவரது மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.
தினமும் குடித்துவிட்டு தனது மனைவி, தாய் ஆகியோரிடம் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவில் குடிபோதையில் வந்த சதீஷ் தாய் அனிதாவிடம் 'உன் கணவன் எங்கே' என்று கேட்டுவிட்டு தகாத வார்த்தைகள் பேசி கன்னத்தில் அடித்து கீழே தள்ளி, கம்பியால் தலை, முகம், முதுகு போன்ற பகுதிகளில் கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
படுகாயமடைந்த அனிதா ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுசம்பந்தமான புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.